Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2020 01:15:39 Hours

இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கை பீரங்கி பிரிகேட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் சாமில முனசிங்க அவர்கள் 2020 ஓகஸ்ட் 18 ஆம் திகதி மன்னார், கூரையில் அமைந்துள்ள 12 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதிக்கு, கட்டளை அதிகாரியினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், படைத் தளபதி படையினர் மத்தியில் உரையாற்றினார்.

அவர் இப் படைத் தளபதி முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டு வைத்த பின்னர் அதிதிகள் புத்தகத்தில் உத்தியோக பூர்வ கையொப்பமிட்டார்.

அதே நாளில், இப் படைத் தளபதி பீரங்கி படையின் 14 ஆவது ரொக்கெட் படையணிக்கும் தனது ஆரம்ப விஜயத்தினை மேற்கொண்டார். Authentic Sneakers | Klær Nike