Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2020 09:45:15 Hours

522 ஆவது படைத் தலைமையகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொடிகாமத்தில் அமைந்துள்ள 522 ஆவது படைத் தலைமையகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இராணுவ சம்பிரதாயத்துடன் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு மிருசுவில் சிறுவர் இல்லத்திலுள்ள சிறார்களுக்கு மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் நவாற்குலி சுமன விகாரையில் மதவழிபாடுகளும், கொடிகாமம் வைத்தியசாலை வளாகத்தில் படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்படையணியின் படைத் தளபதியான பிரிகேடியர் ஜானக விஜயசிரி அவர்களுக்கு இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (20) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு பின்னர் தலைமையக வளாகத்தினுள் தளபதியின் கரங்களினால் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பலிலும் பங்கேற்றுக் கொண்டார்.

மேலும் யாழ் போதனை வைத்தியசாலையில் இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரால் இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் இந்த தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்து கொண்டனர். Running Sneakers Store | Nike