25th August 2020 14:00:15 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுக்கு கீழ் இயங்கும் 591 ஆவது படைப்பிரிவின் 24 ஆது இலங்கை சிங்க படையணியின் படையினர் ஓகஸ்ட் 14-17 ஆம் திகதிகளில் சமூகம் சார்ந்த திட்டங்களைத் ஆரம்பித்தனர். இதற்கிடையில், ஓகஸ்ட் 14 ஆம் திகதியன்று 592ஆவது படைப்பிரிவின் 23 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையின் படையினர் தங்களது கட்டளை அதிகாரியுடன் இணைந்து லதானி சிறுவர் இல்லத்தில் உள்ள 20 சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.அடுத்த நாள், படையினர் வட்டபலை சந்தியில் உள்ள பெயர்-பலகையை புதுப்பித்தனர்.
அதற்கமைய ஓகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில், படையினர் மருத்துவமனை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவையும் சுத்தம் செய்தனர்.
அதே படையினர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி அன்று நெடுங்கேணி 40- கி.மீ மைல் போஸ்ட் முதல் நுஜ் சந்திப்பு வரை சாலையை சுத்தம் செய்ய ஒரு சிரமதான நிகழவை நடத்தினர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, அந்தந்த படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. Authentic Nike Sneakers | Autres