27th August 2020 10:00:26 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 51 ஆவது படைப் பிரிவின் 25 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது இம் மாதம் (24) ஆம் திகதி 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்னாயக அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் 18 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் படையினரது பங்களிப்புடன் இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் யாழ் நாகவிஹாரையில் தேரர்களுக்கு காலை உணவுகள் தானங்களாக வழங்கி வைக்கப்பட்டன.
படைப் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்ற வெள்ளி விழா நிகழ்வின் போது 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் தளபதி அவர்களினால் தலைமையக வாளகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மதிய உணவு விருந்தோம்பலிலும் இணைந்து கொண்டு பின்பு குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். மேலும் ஆகஸ்ட 24 ஆம் திகதி படைப் பிரிவு வளாகத்தினுள் அமைந்துள்ள விகாரையில் போதி பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Nike SB