28th August 2020 09:20:36 Hours
இன்றைய (28) ஆம் திகதி அறிக்கையின் படி இரண்டு பேருக்கு கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பம்பைமடு மற்றும் பெல்வெஹர தனிமைப்படுத்தல் மையங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களே ஆவர். மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள நபர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும் இவர்களில் 518 பேர் கைதிகளாவார், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர்கள், 48 குடும்பங்களுடன் தொடர்புடைய தொடர்புடைய வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த ஒருவரும் என்று கோவிட் மையம் தெரிவித்தது.
கொழும்பிற்கு டோகார் கட்டாரிலிருந்து QR 668 விமானத்தின் மூலம் வருகை தந்த 47 பயணிகளும், டுபாயிலிருந்து EK 648 விமானத்தின் மூலம் வருகை தந்த 22 பயணிகளும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தனிமைப்படுத்தல் மையங்களில் 7,122 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது வரைக்கும் 33,695 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து பரிசோதனைகளின் பின்பு வெளியேறியுள்ளனர். 27 ஆம் திகதி 2110 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று வரைக்கும் நாடாளவியல் ரீதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 219,162 ஆகும்.
இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவரும் மற்றைய 10 பேரும் புணர்வாழ்வு மையத்திலிருந்த நபர்களாவார். இதுவரைக்கு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 604 நபர்கள் பூரன குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 35 நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Best Authentic Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals