24th August 2020 08:50:15 Hours
முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படையின் 11 ஆவது நிறைவாண்டு தின நிகழ்வினை கொண்டாடும் முகமாக படையினர் முல்லைத்தீவு சிலவத்தையிலுள்ள லதானி சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு, ஆடைகள் மற்றும் பாடசாலை உள்ளிட்டவை ஓகஸ்ட் 16 ஆம் திகதி வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படையின் தளபதி பிரிகேடியர் இமால் குருகே அவர்கள் குறித்த நிகழ்வினை நடாத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டதுடன், படையினர் குறித்த நிறைவாண்டினை முன்னிட்டு இராணுவத் தளபதியின் ‘ துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படை வளாகத்தில்60 தென்னங்கன்றுகனை நட்டனர்.
கட்டளை படையணிகளின் கீழ் உள்ள கட்டளை அதிகாரிகள், முல்லைத்தீவு இராணுவ தள வைத்தியசாலையிலுள்ள இராணுவ பொறுப்பதிகாரி, அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாயினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Running Sneakers | adidas Campus 80s South Park Towelie - GZ9177