Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2020 12:30:40 Hours

இராணுவ பொலிஸ் படையணியின் விஷேட விசாரனை பிரிவின் 23 ஆவது ஆண்டு நிறைவு தினம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விஷேட விசாரனை பிரிவின் 23 ஆவது ஆண்டு நிறைவு தினமானது 2020 ஜூன் 06 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்ட நிகழ்வானது வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

குறித்த 23 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வானது சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் 2020 ஓகஸ்ட் 21 ஆம் திகதி கொண்டாடப்பட்டதோடு, முகாம் வளாகத்தில் கட்டளை அதிகாரி கேணல் ரவிந்திர அபேசிங்க அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வு நிறைவுபெற்றது.

குறித்த நிகழ்வானது கொவிட்-19 தொற்று நோய்காரணமாக பின்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Air Jordan