24th August 2020 09:40:15 Hours
எதிர்வரும் காலங்களில் பருவமழையின் போது ஏதேனும் வெள்ள பேரழிவுகள், தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தற்செயல் திட்டங்கள் மீளாய்வு செய்யும் நோக்கத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்களது தலைமையில் இம் மாதம் (19) ஆம் திகதி 571 ஆவது படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த திட்டங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கும் சமயத்தில் தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக 57 ஆவது படைத் தளபதியின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் இந்த ஆராய்வு ஒன்றுகூடலில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவிநிலை பிரதானி, 572 ஆவது படைத் தளபதி, 57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட விவசாய ஆணையாளர், உதவி நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர். affiliate tracking url | Nike Off-White