25th August 2020 16:28:21 Hours
1991 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஆறாவது சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் காமினி குலரத்ன அவர்களது 29 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (24) ஆம் திகதி ஆனையிறவில் அமைந்துள்ள ஹசலக காமினியின் நினைவு தூபி வளாகத்தினுள் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்கள் வருகை தந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த கோப்ரல் ஹசலக காமினியின் நினைவு தூபிக்கு சென்று மலரஞ்சலிகளை செலுத்தினார்.
இந்த நிகழ்வானது 662 ஆவது படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த கொடிதுவக்கு, 662 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ருவன் பதிரவிதான, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
இந்த ஆண்டு நிறைவு விழாவானது ஜூலை 13 ஆம் திகதி இடம்பெறவிருந்த சமயத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் நிமித்தம் பிட்போடப்பட்டு பின்பு இம் மாதம் (24) ஆம் திகதி இந்த நிகழ்வானது இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers Store | NIKE RUNNING SALE