27th August 2020 11:00:26 Hours
இன்றைய (27) ஆம் திகதி அறிக்கையின் படி கொரோனா தொற்று நோய்க்கு 13 பேர் உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் கென்யா (1) மாலைத்தீவு (2) ஆகிய நாடுகளில் இருந்து வந்த 3 பேர் ஹோட்டல் நுவரவெவ தனிமைபடுத்தல் மற்றும் தியகம ஸ்போர்ட்ஸ் வளாக தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய 10 நபர்கள் கந்தகாடில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நபர்களாவர். இன்று (27) காலை 6.00 மணியளவில், மொத்த நபர்களும் கந்தகாட்டு தனிமைபடுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 518 நபர்கள் புனர்வாழ்வின் கீழ் உள்ள நபர்கள் , 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தொற்று நோய்க்குள்ளாகிய நபர்களுடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளடங்குவர் என்று கொவிட் – 19 மையம் தெரிவித்துள்ளது.
தோஹா கத்தாரில் இருந்து கியூஆர் 668 விமானம் மூலம் 12 பயணிகளும் மற்றும் குவைத்தில் இருந்து யூஎல் 220 விமான மூலம் 157 பயணிகளும் கொழும்பு வந்தடைந்தனர், அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய (27) ஆம் திகதி அறிக்கையின் படி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 630பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்கு புறப்பட உள்ளனர். அவர்களில், 03 பேர் நிபுன பூஸ்ஸ, 01 நபர் ருவல கல்பிட்டிய 73 பேர் இரனமடுவில், 09 பேர் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிலும், 70 பேர், முலங்கவில், 171 பேர் கல்கிஸ்ஸை, 06 பேர் ஹோட்டல் கரோலினா 288 பேர் ஹோட்டல் அம்ரியா , 09 பேர் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தில்மையம் ஆகிய தனிமைப் படுத்தல்மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களாகும். அதேபோல் 7,386 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு 70 தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (26) ஆம் திகதிக்குள், 1780 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 213,462 ஆக உள்ளன என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இதற்கிடையில், 03 கொவிட்-19 நோய் தொற்றுக்குள்ளானவர்கள் பூரண குணமடைந்து இன்று (27) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர், அவர்கள் 3 பேரும் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 607 நபர்கள் பூரண குணமடைந்து இதுவரை வெளியேறிவிட்டனர். புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மொத்தம் 32 நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். (முற்றும்) url clone | Sneakers Nike Shoes