30th August 2020 09:30:04 Hours
"தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் ஏப்ரல் 30 க்குப் பின்னரான இரண்டு மாதங்களில் இலங்கையில் கொவிட் -19 தொற்று எதுவும் பதிவாகவில்லை. இன்றைய நிலவரப்படி, 65 தனிமைப்படுத்தல் மையங்களில் 7058 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர், மேலும் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு பின்னர் மொத்தம் 32,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இன்றுடன் 26,000 க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டவர்கள் இன்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயினும்கூட, நாம் சமூகத்தில் வைரஸ் தொற்றை வெகு விரைவில் ஒழிப்பது கடினம். மேலும் நாம் இன்னும் நமது சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டும், இருப்பினும் சில பிரிவுகள் அதன் நோய் தொற்று பரவுவதை புறக்கணிப்பதாகத் தெரிகிறது. அது நமக்கு ஏற்படும் பொறுப்பு. எங்கள் பங்கில் ஏதேனும் சிறிய குறைபாடு ஏற்பட்டால், இந்த வைரஸ் நோய் பரவக்கூடும், "எனவே இன்று (26) பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி மற்றும் கொவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன் மருத்துவ நிபுணர் மற்றும் சுகாதார சேவை பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் சில நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த சந்திப்பில் , கொரோனா தொற்று பரவல் தடுப்பு தொடர்பான புதுப்பிப்புகள் சாத்தியமான புதிய கருத்துக்கள் மற்றும் நாட்டில் நோய் தொற்று பரவலை தடுப்பு தொடர்பாக பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நொப்கோ பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளை வரவேற்றதோடு, குறித்த சந்திப்பின் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. "தற்போது 26,000 மற்றும் அதற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை வந்துள்ளதுடன், மேலும் 55,000 பேர் பிற மூலோபாய தேவைகள் ஏற்ப திருப்பி அனுப்பப்பட உள்ளனர். நடைமுறையில், மேலும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் அனைத்து தனிமைபடுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு,ஒவ்வொரு தனிமைபடுத்தல் நிலையங்களில் இராணுவம் ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்கின்றது,, ”என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த கொரோனா நோய் தொற்றின் தேசிய பணியின் செயல்திறனில் இராணுவம் பெற்ற மகத்தான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைப் பாராட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தொற்றுநோயியல் நிபுணர்கள், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தளபதிகள், மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அனைத்து முதன்மை மற்றும் தரை பங்குதாரர்கள். "அந்த உறுதியான தொலைநோக்குத் தலைமை ஏற்படவில்லை என்றால், இது இராணுவத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்ததால் எங்களுக்கு ஒரு கடினமான நேரம் கிடைத்திருக்கும்," என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சர் நிலவரங்களை விரிவாகக் கூறி, தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றியமைத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பணிக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். "கொடிய வைரஸ் பரவுவதை திறம்பட தணித்த ஒரு தேசமாக இலங்கை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்," என்று அவர் குறிப்பிட்டார். அரசுத் துறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் குறித்து,சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் விளக்கினார். அரசுத் துறை இதை ஒரு நாளைக்கு 2000 ஆகவும், தனியார் துறை ஒரு நாளைக்கு 1000 சோதனைகளாகவும் அதிகரித்தது. இதற்கிடையில், சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூகத்தில் எழுமாற்று சோதனைகளும் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். Sportswear free shipping | Nike Off-White