26th August 2020 10:36:23 Hours
இன்றைய (26) ஆம் திகதி அறிக்கையின் படி கொரோனா தொற்று நோய்க்கு 12 பேர் உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து பலாலி விமானப்படை முகாம் மையத்திலிருந்த 11 பேருக்கும், தம்புள்ள பரடைஷ் ஹோட்டல் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவரும் என்று இணங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் கண்டகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 629 ஆகும். இவர்களில் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் 508 பேர், 67 ஊழியர்கள், 5 விருந்தின ஊழியர்கள், 48 வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தொ ற்று நோய்க்குள்ளாகிய நபர்களுடன் தொடர்புடைய ஒருவரும், என்று கோவிட் – 19 மையம் தெரிவித்தது.
இம் மாதம் (25) ஆம் திகதி மாலைதீவிலிருந்து UL 104 விமானத்தின் மூலம் 03 பயணிகளும், டுபாயிலிருந்து EK 648 விமானத்தின் மூலம் 21 பயணிகளும், டோஹா QR 668 விமானத்தின் மூலம் 17 பயணிகளும், சென்னையிலிருந்து 6E 9034 48 பயணிகளும், டோகா UL 218 விமானத்தின் மூலம் வருகை தந்த 277 பயணிகளும், ஜேர்மனியிலிருந்து UL 1506 விமானத்தின் மூலம் கொழும்பிற்கு வருகை தந்த 102 பேரும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய (26) ஆம் திகதி அறிக்கையின் படி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 228 பேர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 51 பேர் ஜெட்விங் ஹோட்டலிலிருந்தும், 135 நபர்கள் ஜெட்விங் ப்ளு மையத்திலும், 10 பேர் ஜெட்விங் பீச் ஹோட்டலிலும், 20 பேர் கெரோலினா பீச் மையத்திலும், 12 பேர் ராஜகிரிய ஆயுர்வேத மையத்திலும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7,058 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இம் மாதம் (25) ஆம் திகதி 1580 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இது வரைக்கும் முழுமையாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் முழு எண்ணிக்கை 211,090 ஆகும்.
இன்றைய பதிவின் பிரகாரம் கோவிட் – 19 தொற்று நோய்க்குள்ளாகியுள்ள ஐவரில் மூவர் வெளிநாட்டவர்கள் மற்றைய இருவர் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களாவார். கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 607 நபர்கள் பூரன குணமாகி வெளியேறியுள்ளனர். தற்போது 22 நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Nike shoes | Sneakers