25th August 2020 13:15:15 Hours
இன்று (25) ஆம் திகதி அறிக்கையின் படி ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று நோயிருப்பதாக இணங்காணப்பட்டுள்ளன. இவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து ஹோட்டல் பெயார்வே மையத்திலிருந்த ஒருவருக்கும், ஐக்கிய அராபியவிலிருந்த வந்து பொது சேவை முகாம் மையத்திலிருந்த இருவருக்கும், இந்தோனிசியாவிலிருந்து வருகை தந்து இரனைமடு விமான முகாம் மையத்திலிருந்த ஒருவருக்கும், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்து பூவரசம்குளம் விமானப்படை மையத்திலிருந்த ஒருவருக்கும், மாலைதீவிலிருந்து வருகை தந்து கேகாலை மையத்திலிருந்த ஒருவருக்குமே இந்த கொரோனா தொற்று நோய் இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளனர். இன்றைய அறிக்கையின் படி புணர்வாழ்வு மையத்தில் இருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள நபர்களின் மொத்த எண்ணிக்கை 629 ஆகம் . இதில் 508 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர்கள்,வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட 48 நபர்களுடன் தொடர்புடைய ஒருவரும் என்று கோவிட் மையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவிலிருந்து KE 9473 விமானத்தின் மூலம் வருகை தந்த 275 நபர்களும், டோகார் கட்டாரிலிருந்து QR 688 விமானத்தின் மூலம் வருகை தந்த 21 நபர்களும் கொழும்பை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இன்றைய (25) ஆம் திகதி அறிக்கையின்படி தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 89 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நிபுன பூசாவிலிருந்த 8 பேரும், பொது சேவை முகாம் மையத்திலிருந்த 07 பேரும், தியதலாவை முதலாவது கெமுனு முகாம் மையத்திலிருந்த 03 பேரும், கல்கிஸ்ச ஹோட்டலிலிருந்து இருவரும்,கெரோலினா விலாஜ் மையத்திலிருந்து 68 நபரும், தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 7,038 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய (24) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1780 ஆகும் இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 208,397ஆகும்.
இன்றைய தினம் கொரோனா தொற்று நோய்க்கு ள்ளாகியுள்ள 6 நபர்களில் மூவர் வெளிநாட்டவர்கள் எஞ்சிய மூவர் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் இருந்த நபர்களாவார். இதுவரைக்கு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியிருந்த 605 பேர் குணமாகி வெளியேறியுள்ளனர். மேலும் 24 நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Nike footwear | Men's Footwear