Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2020 13:23:40 Hours

இராணுவத்தின் உதவியுடன் ‘சிரச நிவச’ திட்டத்தின் கீழ் புதிய வீடு நிர்மானிப்பு

பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அறிவுறுத்தலின் பேரில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு கிரிந்த புகுள்வெல பிரதேசத்தில் சிரச ஊடக அனுசரனையுடன் இராணுவ மனிதவள உதவியுடன் இந்த புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயணாளிக்கு கையளிக்கப்பட்டன.

61 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 3 ஆவது கெமுனு காலாட் படையணியின் படையினரது பூரன ஒத்துழைப்புடன் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டு பயணாளிக்கு கையளிக்கப்பட்டன.

இம் மாதம் (21) ஆம் திகதி பயனாளியான திருமதி பிரதீபா பிரியங்கனி அவர்களுக்கு சிரச ஊடக அனுசரனையாளர்களான திருமதி நீட்ரா வீரசிங்க அவர்களினால் இந்த புதிய வீடானது நிகழ்வொன்று ஒழுங்கு செய்து கையளிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் 3 ஆவது கெமுனு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டப்ள்யூ.ஏ.கே.யூ சந்திக அவர்கள் இணைந்து கொண்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களது எண்ணக்கருவிற்கமைய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்து அவரது வழிக்காட்டலின் கீழ் 3 ஆவது கெமுனு காலாட் படையணியினால் இந்த புதிய வீடு முழுமையாக நிர்மானிக்கப்பட்டன.

இராணுவ தளபதியின் பரிந்துரைப்பின் பிரகாரம் ‘சிரச நிவச’ உதவித் திட்டத்தின் கீழ் இராணுவத்தின் மனிதவள உதவியுடன் இந்த புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த வீடு கையளிப்பு நிகழ்விற்கு கிரிந்த – புகுளுவெல உதவி பிரதேச செயலாளர், இராணுவ அதிகாரிகள் மற்றும் நலம் விரும்பிகள் பங்கேற்றிக் கொண்டனர். Buy Kicks | balerínky