28th August 2020 09:30:36 Hours
இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவானது 2009 ஆம் ஆண்டிற்கு முன்பு பயங்கரவாத எதிர்ப்பு போர் நடவடிக்கை உச்ச கட்டத்தின் போது பிரபலாமாக விளங்கிய படைப் பிரிவாகும். இதன் வெள்ளி விழாவானது இம் மாதம் (24) ஆம் திகதி தம்புள்ளை இனாமலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்த படைப் பிரிவிற்கு ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான பாதுகாப்பு செயலாளருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா போன்ற உயரதிகாரிகள் தலைமை வகித்துள்ளனர்.
தற்போது 25 ஆவது வருடத்தை கிட்டும் இச்சமயத்தில் இப்படைப் பிரிவின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இரண்டு கிழமைகளுக்கு முன்பு சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகள் படைப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த படைப் பிரிவின் வெள்ளி விழா நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளரான இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி அவர்களை 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி வரவேற்று பின்னர் இவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்வின் ஆரம்ப அங்கமாக எல்டிடிஈ கொடிய பங்கரவாத யுத்தத்தின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு இவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். பின்பு 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது. அடுத்ததாக இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதியவர்கள் இந்த படைப் பிரிவிற்காக ஆற்றிய பாரம்பரிய சேவைகளை கௌரவித்து இந்த நிகழ்வினூடாக 533 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் நிஷாந்த ஜயசுந்தர அவர்கள் சிறப்பு உரையை நிகழ்த்தினார்.
53 ஆவது படைப் பிரிவின் வெள்ளி விழாவை முன்னிட்டு இந்த படைப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட வீடியோ ஆவணக் காட்சிகள் திரை மூலம் இந்த நிகழ்வில் முன்வைக்கப்பட்டன.
இந்த வெள்ளி விழாவில் இந்த படைப் பிரிவிற்கு பாரிய சேவைகளை ஆற்றிய தளபதிகளான பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதிகளின் அவர்களது சேவைகளை பாராட்டும் பொருட்டு இந்த நிகழ்வினூடாக நூலொன்று வெளியிடப்பட்டன. பாதுகாப்பு செயலாளரிற்காக வெ ளியிடப்பட்ட நூலில் கமல் குணரத்ன அவர்கள் ஒரு மனிதாபிமான நடவடிக்கைக்கு உறுதியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபராவார். இவர் தமது சகோதர படை வீரர்களுடன் நெருக்கமாக நின்று தலைமைத்துவத்தை சரியான முறையில் வழங்கி நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுத் தருவதற்கு பாரிய அர்ப்பணிப்பு வழங்கிய அதிகாரியாவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இராணுவ தளபதிக்காக வெளியிடப்பட்ட ‘கோபி டேபள்’ எனும் நூலில் இராணுவ தளபதியவர்கள் நாட்டின் உறுதிப்பாட்டிற்கும், சமாதானத்தின் விடியலுக்கும் பாரிய பங்களிப்பை வழங்கினார். மேலும் இராணுவ தளபதியவர்கள் இராணுவ வாழ்க்கை முழுவதும் மிக உயர்ந்த திறமை வாய்ந்த ஒரு போர் வீரராக குறிப்பிடத்தக்க நபராவார். அத்துடன் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தனது சிறந்த பங்களிப்பை நாட்டிற்காக வழங்கியிருந்தார். மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு சிறந்த பெறுபேறுகளை இராணுவத்திற்கு பெற்று தந்த அதிகாரியாக இராணுவ தளபதி அவர்கள் விளங்கினார் என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நூல்களை இந்த நிகழ்வினூடாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றினார். இதன் போது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 53 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் 15 கட்டளை அதிகாரியின் கட்டளையுடன் பயங்கரவாதிகளின் சவால்களுக்கு முகமளித்து வெற்றிகளை மேற்கொண்டோம். இதற்கு காரணம் நான் கஜபா படையணியில் பெற்றுக் கொண்ட அனுபவம், பயிற்சி மற்றும் தலைமைத்துவங்களாகும்.
மேலும் இந்த படைப் பிரிவானது ‘எயார் மொபைல் படையணிகளை’ கொண்டு சிறப்பு தாக்குதல் மற்றும் கொமாண்டோ படையணிகளை கொண்டு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாரிய பங்களிப்பை வழங்கியது.
அடுத்து இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி அவர்களுக்கு 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களினால் இவர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுப் பரிசொன்று பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் இராணுவ தளபதி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கோவிட் – 19 கொரோனா தொற்று நோய்க்கு எதிராக மேன்மை தங்கிய ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்கள் வழங்கும் பாரிய ஒத்துழைப்பிற்கு நன்றிகளை தெரிவித்த துடன் நாம் இப்போது நாடாளவியல் ரீதியாக தனிமைப் படுத்தல் மையங்களை அமைத்து தனிமைப்படுத்தல் நிருவாகத்தினை சரியான முறையில் மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த இரு அதிதிகளும் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு பின்பு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பலில் இணைந்து கொண்டு இறுதியில் அதிதிகள் இருவரும் பிறமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றனர் இந்த நிகழ்வுகளில் 531, 532 மற்றும் 533 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையணியினர்கள் பங்கேற்றிக் கொண்டனர்.
இப்படைப் பிரிவானது 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் நிமித்தம் பிரிகேடியர் ஜானகபெரேரா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.Adidas shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals