24th August 2020 11:50:45 Hours
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்தவரும், பாதுகாப்பு பதவிநிலை அலுவலகத்தின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகமாக இருந்த மேஜர் ஜெனரல் குமார சமரசிங்க அவர்கள் இராணுவத்தில் நீண்ட காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் இந்த மூத்த அதிகாரி பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (21) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது இராணுவ தளபதி மற்றும் இந்த மூத்த அதிகாரிகளுக்கு இடையில் கடந்த கால போர்க்கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இந்த மூத்த அதிகாரியவர் பல முக்கிய நியமனங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கும், இவர் பீரங்கிப் படையணி மற்றும் இராணுவத்தை மேம்படுத்துவதில் பாரிய பங்களிப்பை ஆற்றியமைக்காக இராணுவ தளபதியவர்களினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இவர் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இராணுவத்தில் பாரிய சேவைகளை ஆற்றிய அதிகாரியாவார்.
இந்த மூத்த அதிகாரியவர் தனது தளபதியின் விருப்பங்களுக்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவ தளபதியிடம் பெற்ற அனுபவங்களையும் இத்தருணத்தில் இராணுவ தளபதியிடம் தெரிவித்தார். இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் இவரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. Sportswear free shipping | Gifts for Runners