21st August 2020 10:37:25 Hours
சென்னையிலிருந்து வந்து டொல்பின் ஹோட்டல், அம்பாறை மற்றும் நுரைச்சோலை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 16 பேருக்கு கொரோனா தொற்று நோய்கள் இருப்பதாக கோவிட் – 19 மையத்தின் இன்றைய (21) ஆம் திகதி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்றைய அறிக்கையின் படி கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் முழு எண்ணிக்கை 629 ஆகும். இவர்களில் 508 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள், 5 பேர் ஊழியர்களாவர், 48 வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய ஒருவரும் அடங்குவார்கள் என்று கோவிட் – 19 மையம் தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்து VK 648 விமானத்தின் மூலம் 34 பயணிகளும், டோஹாவிலிருந்து QR 668 விமானத்தின் மூலம் 47 பயணிகளும் கொழும்பை வந்தடைந்தனர். பெங்கொங்கிலிருந்து UL 403 விமானத்தின் மூலம் 79 பயணிகளும், மெல்போனிலிருந்து UL 605 விமானத்தின் மூலம் 290 பயணிகளும் வரவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்
மேலும் இன்றைய அறிக்கையின் பிரகாரம் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 6 நபர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களில் இருவர் கல்பிட்டி ருவல்ல மையத்திலும், 4 பேர் நிபுன பூசா மையத்திலிருந்து சென்றுள்ளனர். இன்று வரைக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து தனிமைப்படுத்தலின் பின்பு 31,142 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிருவாகித்து வரும் 43 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 6715 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம் மாதம் 20 ஆம் திகதி 1610 பேர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இன்று வரைக்கும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 197,272 ஆகும்.
இதற்கிடையில் இன்று கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிய 5 நபர்களில் 4 பேர் வெளிநாட்டவர்கள், ஒருவர் கந்தகாடைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவார்கள். இது வரைக்கும் புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிய 571 நபர்கள் சிகிச்சையளிப்பின் பின் பூரண குணமாகி வெளியேறியுள்ளனர். மேலும் 58 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Buy Kicks | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1