21st August 2020 13:27:34 Hours
கொழும்பு 7 சுதந்திர சதுர்க்கத்தில் அமைந்துள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் கௌரவத்திற்குரிய விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களது தலைமையில் தேசிய விளையாட்டு சபை அங்கத்தவர்கள் தேர்ந்தெடுப்பானது இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது.
முன்னாள் கிரிக்கட் சிறப்பாட்ட வீரனான மகேல ஜயவர்தன அவர்களது தலைமையில் இருவருடத்திற்கு இந்த தேசிய விளையாட்டு சபை அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களும் இந்த சபையில் அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய விளையாட்டு துறை அமைச்சரினால் புதிய அங்கத்தவர்களான ஜூலியன் போலிங், குமார சங்கக்கார, டிலந்த மல்லகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன் அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அந்த நியமனங்களின் முக்கியதுவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். .
இந்த சந்திப்பின் போது புதிய அமைச்சருக்கு 14 புதிய அங்கத்தவர்களும் விளையாட்டுகள் தொடர்பான முன்னேற்றங்களை இச்சந்திப்பின் போது எடுத்துரைத்தார்கள். மேலும் இதன் போது தேசிய விளையாட்டு சபையின் முன்னாள் தவிசாளரான இராணுவ தளபதியவர்கள் கடந்த ஆண்டில் விளையாட்டு துறையின் சாதனைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சருக்கு பரிந்துரைத்தார்.
இச்சந்திப்பின்போது விளையாட்டு அமைச்சின் செயலாளர், மூத்த கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கங்கார, ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.ஆர் அம்பேமோட்டி, டிலந்த மலஹமுவ, சஞ்ஜீவ விக்ரமநாயக, கஸ்தூரி வில்ஷன், சுபுன் வீரசிங்க மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர். best Running shoes | Nike Shoes, Clothing & Accessories