18th August 2020 16:40:41 Hours
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தெற்கு சூடானைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் புனானையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் மற்றும் ஜெட்விங் ஹோட்டலிலிருந்த இருவர் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளதாக அறிக்கை இம் மாதம் (19) ஆம் திகதி பதிவாகியுள்ளது. மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிய நபர்களது மொத்த எண்ணிக்கை 629 ஆக உள்ளது. அவர்களினல் 508 நபர்கள் புணரவாழ்வளிக்கப்பட்டு வரும் கைதிகளாவர், 5 பேர் விருந்தின ஊழியர்கள், வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட நபரொருவர் என கோவிட் – 19 மைய அறிக்கை வெளியிட்டுள்ளது. .
இம் மாதம் (19) ஆம் திகதி டுபாயிலிருந்து ஈகே 648 விமானத்தின் மூலம் 13 பயணிகளும், டோகாவிலிருந்து QR 668 விமானத்தின் மூலம் 364 பயணிகளும், லண்டனிலிருந்து UL 504 விமானத்தின் மூலம் 10 பயணிகள் கொழும்பை வந்தடைந்தனர். இவர்கள் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப ப்பட்டுள்ளனர்.
இன்றைய (19) ஆம் திகதி அறிக்கையின் படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 111 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான விடதப்பளையில் 67 பேரும், கல்கிஸ்சையிலிருந்து 5 பேரும், முழங்காவிலிருந்து 24 பேரும், நிபுன பூஸ்சையிலிருந்த 11 பேரும், பெயார்வே
ஹோட்டலிலிருந்து 4 பேரும் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரைக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து தனிமைப்படுத்தலின் பின்பு 31,021 நபர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முப்படையினரால் நிருவாகித்து வரும் 43 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 5,632 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இம் மாதம் (18) ஆம் திகதி 1,120 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதுவரைக்கும் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 191,507 ஆகும்.
மேலும் கோவிட் – 19 தொற்று நோய்க்கு பாதிப்பிற்குள்ளான 79 பேர் பூரன சிகிச்சையளிப்பின் பின்பு இம் மாதம் (19) ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து இணங்காணப்பட்டவர்கள் ஆவார். கண்டகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கோவிட் -19 தொற்று நோய் இணங்காணப்பட்ட 567 நபர்கள் சிகிச்சையளிப்பின் பின்பு மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். மேலும் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிய இந்த புணர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த 62 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) buy footwear | UOMO, SCARPE