Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2020 12:07:51 Hours

தெனியாவில் இராணுவ தளபதியின் வன்னி நடவடிக்கை மற்றும் கோவிட் சாதனைகளை கௌரவித்து ஆசிர்வாத நிகழ்வுகள்

தெனியாவில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஶ்ரீ புஸ்பராம விகாரையில் பெரும் பௌத்த பக்தர்களது பங்களிப்புடன் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் சாதனைகளை நிலை நாட்டியதற்கும், கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் ஒழிப்பு பணிகளுக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து பௌத்த விஷேட ஆசிர்வாத பூஜைகள் இம் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த பௌத்த நிகழ்வானது விகாரையின் திறந்த வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதியவர்கள் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். இதன் போது 108 மூலிகைகளை உள்ளடக்கி ‘கிலன்பஷ பூஜைகள்’ புத்த பெருமானின் பிரதான சன்னதிக்கு முன்வைக்கப்பட்டு ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

மதிப்புக்குரிய ஊரபொக்க உபானந்த தேரர், விகாராதிபதி தெனியாய ஶ்ரீ புஸ்பராமா தேரர் மற்றும் பல்வேறுபட்ட தேரர்களது பங்களிப்புடன் ‘ஜய பிரித்’ ஓதுதல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இராணுவ தளபதியவர்களுக்கு தெனியாய புஸ்பராம விகாராதிபதி அவர்களினால் பாராட்டு விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இதன் போது விகாராதிபதி அவர்களினால் இராணுவ தளபதி அவர்கள் கோவிட் -19 எதிரான போராட்டத்திற்காக நாட்டிற்காக ஆற்றிய பாரிய சேவையை கௌரவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன் மகாசங்க தேரர்கள் ஒன்றினைந்து இராணுவ தளபதி அவர்களுக்கு இந்த நிகழ்வினூடாக தங்க முலாம் பூசப்பட்ட ‘டகோபா’ பௌத்த சயித்தியை நினைவு பரிசாக வழங்கி வைத்தனர். அத்துடன் இராணுவ தளபதியின் புகைப்படங்களும், மூலிகைகளும் இந்த நிகழ்வினூடாக இராணுவ தளபதியவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. .

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஏழைகள் 100 பேருக்கு உலருணவு பொதிகள் இராணுவ தளபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஓரிரு சிறார்களுடன் இராணுவ தளபதியவர்கள் உரையாடல்களையும் மேற்கொண்டார்.

இந்த பௌத்த நிகழ்வில் அப்பகுதியிலுள்ள ஏராளமான தேர ர்கள் மற்றும் பௌத்த பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . latest jordans | Womens Shoes Footwear & Shoes Online