Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 14:25:41 Hours

இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசாலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிரிதலையில் அமைந்துள்ள இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசாலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (13) ஆம் திகதி பயிற்சி முகாமில் இராணுவ சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றது.

இந்த ஆண்டு நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி கேர்ணல் அநுர பண்டார அவர்கள் வருகை தந்தார். இவருக்கு படையினரால் இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் கட்டளை தளபதி அவர்களினால் பயிற்சி பாடசாலை வளாகத்தினுள் மரநடுகை மேற்கொண்டும், படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் மற்றும் பகல் விருந்தோம்பலிலும் கலந்து கொண்டு படையினர் மத்தியில் உரையையும் இவர் நிகழ்த்தினார்.

மேலும் அன்றைய தினம் கிரிதலை பயிற்சி பாடசாலை உள்ள நினைவு தூபி வளாகத்தினுள் விளக்குகள் ஏற்றப்பட்டு போதி பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Sports Shoes | Sneakers