18th August 2020 18:33:38 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பானலுவ துன்னான வயல்களில் கன்னி நெல் முதல் அறுவடை இன்று (18) ஆம் திகதி சமய சம்பிரதாய ஆசிர்வாதங்களின் பின்பு இடம்பெற்றது.
இந்த அறுவடையை ஆரம்பித்து வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் வருகை தந்து ஆரம்பித்து வைத்தார்.
இராணுவ தளபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் இந்த விவசாய நலன்புரித் திட்டமானது 6 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டன.
இந்த அறுவடை நிகழ்வின் ஆரம்பத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிருவாக பிரதானி பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன, கேர்ணல் துஷான் கனேபொல, திட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். bridgemedia | nike air jordan lebron 11 blue eyes black people