18th August 2020 06:28:10 Hours
அதிமேதகு ஜனாதிபதியினால் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டிணட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக தும்மலசூரிய ஜே ஆர் ஜயவர்தன மத்தியக் கல்லூரியின் அபிவிருத்தி பணிகள் சில நாட்களுக்கு முன்னர் 11வது கள பொறியியலாளர் படை, முதலாவது இலங்கை தேசிய பாதுகாவல் படை மற்றும் பொறியியல் சேவைகள் படையினர் நிறைவு செய்துள்ளனர்.
படையினருக்கு வழங்கப்பட்ட திட்டங்களான புதிய விளையாட்டு மண்டபம், படிக்கட்டு மற்றும் எல்லை மதில் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சிறப்பாக ஒரு சில நாட்களுக்குள் நிறைவு செய்தமைக்காக பாடசாலை சமூகம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
படையினர் தங்களது கட்டளை அதிகாரிகளுடன் பாடசாலை அதிபருக்கு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி உத்தியோக பூர்வமாக கையளித்து வெளியேறினர். Running Sneakers | Nike