Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 08:06:19 Hours

கப்பல் பணியாளர்களின் தொடர்ச்சியான வாழ்வாதாரத்திற்கான சாத்தியபாடுகள் தொடர்பாக ஆராய்வு

இலங்கைக் கடல் பணிகள் மற்றும் கடல்சார் சேவைகளுடன் தொடர்புடைய சிலோன் அசோசியேஷன் ஆஃப் ஷிப்பிங் முகவர்கள் (CASA), கொழும்பு லொஜிஸ்டிக்ஸ், அவன் கார்ட் மற்றும் ரக்னா லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று 17ம் திகதி கடற் கொள்ளையர்களுக்கு எதிரான மிதக்கும் கப்பல்களுக்கான பாதுகாப்பிற்கான சிறந்த நடைமுறைகள், கடல்சார் சேவைகளின் தொடர்ச்சியான வாழ்வாதாரம் தொடர்பாக ஆராய்யப்பட்டது.

கப்பல்களில் சிக்கியிருந்த நூற்றுக் கணக்கான கப்பல் பணியாளர்களை கரைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படை குறித்த நிறுவனங்களுடன் இணைந்து முன்மாதிரியான செயல்பாட்டுப் பங்கைக் கொண்டிருந்தமை, வணிக நோக்கங்களுக்காக இத்தகைய நடைமுறைகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த பணியாளர்களில் சிலர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோய் காரணமாக எல்லா தொழிற்துறைகளும் பெரும் பின்னடைவை எதிர்க் கொண்டுள்ள நிலையில் அவற்றின் இலாப பங்கு வெகுவாக குறைந்துள்ளது. இதன் போது நிறுவனங்களின் குறைகள், எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு செவிமடுத்து அரசாங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்தினர். மேலும் மூலோபாய பொறிமுறை தயாரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுவான பிரச்சிணைகள் தீர்க்கப்படலாம் தொழிலுக்கான உத்தரவாதமும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

தொற்றுநோயின் உச்சத்தின் போது, கடற்படை தெற்காசிய பிராந்தியத்தில் இதுபோன்ற சேவை வழங்குநர்களில் முன்னியில் இருகின்றனர். கப்பல் பணியாளர்களுக்காக இதுபோன்ற சேவையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய முன்மாதிரியான சேவை நிறுவனமாகும். மேலும் கப்பல் பணியாளர்களுக்கு கொழும்புக்கு வெளியே உள்ள கப்பல்களில் வெளியேரவும் சேவைக்கு மீண்டும் செல்லவும் தேவையான அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி வசதி செய்து கொடுத்து. இக்கலந்துரையாடலில் தீர்மானம் எடுப்பதற்காக பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளையும் செயல்பாட்டு திட்டங்களையும் சமர்ப்பித்தனர்.

இலங்கை இராணுவ நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, இலங்கை கடற்படை நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் வைஎன் ஜயரத்ன, விமான நிலைய பிரதம முகாமையாளர் திரு எச்.எஸ். ஹெட்டியாராச்சி, தொற்று நோயியல் நிபுணரான வைத்தியர் சமிதா கினிகே, வைத்தியர் ரொசான் சம்பத் மற்றும், கப்பல் வணிக பிரதிநிதிகளான திரு அசேன் வெலகெதர, திரு ரால்ப் ஆனந்தப்பா, திரு சானோ ஷபார் மற்றும் திரு இக்ரம் கடிலியன் அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் (ஓய்வு) நிசங்க சேனாதிபதி,கொமண்டர் (ஓய்வு) நந்தன தியபாலனகே, பிரிகேடியர் (ஓய்வு) நிசாந்த வடுகொடபிட்டிய, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரசிக்க கருனாதிலக்க, கொழும்பு லொஜிஸ்டிக் நிறுவனத்தின் திரு எரிக் அம்பரங்கொட , மேஜர் ஜெனரல் (ஓய்வு) சார்ஜி கால்லகே ஆகியோர் பங்குபற்றினர்.

பிரிகேடியர் ஹெரன் பீரிஸ், விநியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வணிகசேகர, , காணி சொத்து மற்றும் சிப்பாய் விடுதி பணிப்பாளர் பிரிகேடியர் வந்தித மஹிங்கந்த, இராணுவத் தலைமையக தடுப்பு மருந்து மற்றும் மனநல பணிபகத்தின் பிரதி பணிப்பாளர் கர்னல் சவீன் சேமகே, கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் விபுல சந்திரசிறி ஆகியோரும் பங்குகொண்டனர். Sports Shoes | nike