13th August 2020 10:30:18 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் ஒகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 51 மற்றும் 52 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு தனது உத்தியோக விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை 51 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்னாயக அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர் 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை படையினரால் நுழைவாயிற் மரியாதை வர வேற்பு வழங்கப்பட்டது. அத்துடன், 51 ஆவது படைப் பிரிவின் கீழ் பணிப்புரியும் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பு, அவர்களின் பங்கு மற்றும் பணிகள் குறித்து விரிவான விளக்கமானது தளபதிக்கு வழங்கப்பட்டது.
புதன்கிழமை 12 ஆம் திகதி அவர் 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்திற்கு தனது உத்திய்யோகபூர்வான விஜயத்தை மேற்கொண்டார். இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதிக்கு படையினரால் நுழைவாயிற் மரியாதை வர வேற்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் விஜயத்தை மேற்கொண்ட யாழ் தளபதியர்களுக்கு குறத்த படைத் தலைமையகத்தின் கடப்பாடுகள் தொடர்பான விளக்கவுரையானது படைப் பிரிவுத் தளபதியினால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். bridge media | Air Jordan