Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2020 11:43:38 Hours

கிழக்கு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்கள் இம் மாதம் 9 – 11 ஆம் திகதி வரையான காலப் பகுதிகளில் 22 மற்றும் 23 ஆவது படைப் பிரிவு தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த கிழக்கு படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் தலைமையகங்களுக்கு சென்ற கிழக்கு தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். இதன் போது படையினரது பயிற்சிகள் வளர்ச்சி தொடர்பாகவும், இராணுவ ஒழுக்க பராமரிப்பு தொடர்பான விடயங்களை உரைத்தார்.

பின்னர் 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிப ஜயசுந்தர அவர்கள் வரவேற்று பின்னர் கிழக்கு தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இப் படைப் பிரிவு தலைமையகங்களுக்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டுச்சென்றார். Sports brands | Trending