Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2020 12:15:33 Hours

பயிற்சி கட்டளை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

பொது நிர்வாக பிரதானி மற்றும் பயிற்சி கட்டளைத் தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் இராணுவ எகடமிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இராணுவ எகடமிக்கு வருகை தந்த பயிற்சி கட்டளை தளபதியை எகடமியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த ஞாணரத்ன அவர்கள் வரவேற்றார். பின்பு தளபதி எகடமியில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீர ர்களை கௌரவித்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அங்கு பயிற்சியை மேற்கொள்ளும் கெடெற் அதிகாரிகள் முன்னிலையில் சினோ லங்கா கேட்போர் கூடத்தில் வைத்து உரை நிகழ்த்தினார்.

பின்னர் பயிற்சி கட்டளை தளபதி அவர்கள் எகடமியிலுள்ள வகுப்பறைகள், நூலகம், மருத்துவ அறை, உடற்பயிற்சி கூடங்களை பார்வையிட்டு எகடமி அதிகார விடுதியில் தனது மதிய உணவை எடுத்துக் கொண்டார். இறுதியில் கட்டளை தளபதி அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். Sports brands | Nike