13th August 2020 10:01:18 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக,11 ஆம் திகதிசெவ்வாய்கிழமை புதிதாக கடமை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவகொட அவர்கள் தனது சொந்த படையணியான 8 ஆவது பீரங்கி படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது படையினரால் கௌரவ மரியாதை வழங்கப்பட்டது2007 மார்ச் 06 ஆம் திகதி முதல் 2007 டிசம்பர் 31 ஆம் திகதி வரை மனிதாபிமான நடவடிக்கையின் போது குறித்த படையணி மற்றும் கிளிநொச்சியிலுள்ள பீரங்கி ஒருங்கிணைப்பு தலைமையகத்தினை தலைமை வகித்தார்என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
8 ஆவது இலங்கை பீரங்கி படையணிக்கு வருகை தந்த தளபதி கட்டளை அதிகாரி லெப்டினன்கேணல் டபிள்யூ.எஸ்.ஏ.பி தர்மரத்ன அவர்களால் வரவேற்றதுடன் நுழைவாயிலில் வைத்து படையினரால் கௌரவ வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் படையினர் மத்தியில் உரையாற்றியதுடன் தற்போதைய வகிபாகம் மற்றும் பணிகள் மற்றும் பொறுப்புகள், படையினரை அனுப்புதல் மற்றும் படைப்பிரிவு தொடர்பான விவரங்கள் குறித்து கட்டளை அதிகாரியிடமிருந்து ஒரு சுருக்கமான விளக்கக்காட்சியைப் பெற்றார். அன்றைய பிரதம அதிதி முகாம் வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டதுடன்ள வேறு களஞ்சியங்களையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் படையினர்களுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார்.
அடுத்து, மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவகொட அவர்கள் பீரங்கி ஒருங்கிணைப்பு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார், அங்கு வருகை தந்த அவரை கட்டளை அதிகாரியான மேஜர் டி.எம்.என்.பி அபேரத்ன அவர்கள் வரவேற்ரார். பின்னர், படைப்பிரிவின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகப் பணிகள்தொடர்பாக கட்டளை அதிகாரிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. இறுதியாக, அவர் முகாம் வளாகத்திற்குச் சென்று பீரங்கி கனரக வாகனங்களை பார்வையிட்டார்.
முகாம் வருகையின் நினைவாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி தலைமையக வளாகத்தில் மரக்கன்றை நட்டுவைத்ததுடன்அதிதிகள் புத்தகத்தில் கையெழுத்திட்டார் Buy Kicks | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov