Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2020 11:31:18 Hours

தனிமை படுத்தலின் பின்னர் தங்களின் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

சென்னையில் இருந்து கடல் மார்கமாக இலங்கைக்கு திரும்பி வந்த, கொவிட்-19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சன்செட் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (13) காலையில் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை (13) காலை 6.00 மணியளவில் 629 ஆக உள்ளது. அவர்களில், 508 நபர்கள் புனர்வாழ்வின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட 01 நபர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

தோஹாவிலிருந்து கியூஆர்668 விமானம் மூலம் 13 பயணிகள்,சென்னையிலிருந்து 6இ 9103 விமானம் மூலம் 39 பயணிகளுடன் பயணிகள் மற்றும் துபாயிலிருந்து யூஎல் 226 விமானம் மூலம் 290 பயணிகளுடன் குறித்த விமானங்கள் கொழும்பு வந்துள்ளன, அவர்கள் அனைவரும் இன்று காலை (13) முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இன்று (13) நிலவரப்படி, தனிமைப்படுத்தப்பட்ட 35 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர். அவர்களில், 06பேர் ஒலுவில் தனிமைபடுத்தல் மையத்தில் உள்ள வெளிநாட்டு வதிவிட இலங்கையர்களும்,புனானி தனிமைபடுத்தல் மையத்தில் உள்ள 09, பானிச்சங்கேனி தனிமைபடுத்தல் மையத்தில் உள்ள 13 பேரும், விடத்தபலை தனிமைபடுத்தல் மையத்தில் உள்ள 07 பேரும் அடங்குவர். இன்றுவரை, தனிமைப்படுத்தப்பட்ட 30,133 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதேபோல், முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 3840 நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (12) க்குள், 1370 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 177,400 ஆகும்.

இதற்கிடையில், கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த 16 பேர் இன்று (13) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர். அவர்களில் 11 பேர் உள்நாட்டில் நோய்தெற்றுக்குள்ளானவர்கள் , மீதமுள்ளவர்கள் 05 பேர் வெளிநாட்டு வதிவிட இலங்கையர்கள். அதன்படி, கண்டகாட்டில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 460 நபர்கள் குணமடைந்த பின்னர் வெளியேறியுள்ளனர். புனர்வாழ்வு மையத்துடன் இணைக்கப்பட்ட மொத்தம் 169 தொற்றுக்குள்ளானவர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். (முடிவடைகிறது) jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer