Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2020 12:07:33 Hours

இராணுவம் நிர்மாணித்த உட ரதெல்ல தமிழ் பாடசாலை வகுப்பறை திறந்து வைப்பு

உட ரதெல்லா தமிழ் ஆரம்ப பிரிவு பாடசாலையில் நன்கொடையாளர்களின் நிதி உதவிகளுடன் இராணுவத்தால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திங்கட்கிழமை 10ம் திகதி -மத்திய பாதுகாப்புப் படைகள் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் நலின் சிரிவர்தன மற்றும் அவரின் நண்பர்கள், மூலப்பொருட்களை வாங்குவதற்கான நிதியை வழங்கியிருந்னர், அதே நேரத்தில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தங்கள் பொறியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் கட்டுமானப் பணியை முள்னெடுத்தது மத்திய பாதுகாப்புப் படைகள் தளபதி புதிய வகுப்பு அறை கட்டிடத்தைத் கையளித்தார்.

112வது தளபதி பிரிகேட் பிரிகேடியர் பிரசன்ன எதிரிவீர, 3வது சிங்க படையின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.ஏ.எம். ரந்திலகே, அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். bridge media | Sneakers