11th August 2020 14:00:29 Hours
இலங்கை சிங்க படையணியின் விசேட தேவையுடைய 5 போர் வீரர்களுக்கான செயற்கை கால்கள் 08 ஆம் திகதி சனிக்கிழமை அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திரு திமுத் கருனாரத்ன அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
சிங்க படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இந்து செனவிரத்ன நன்கொடைக்கும் உதவிகளுக்கும் மற்றும் சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் வைத்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சிங்க படையணியில் யுத்தத்தில் காயமடைந்து மிகவும் பாதிப்புக்குள்ளாகிய இந்த போர் வீரர்கள் தேர்ந் தெரிந்தெடுக்கப்பட்டமைக்கும் நன்றி பாராட்டினார்.
இந் நிகழ்வில் சிங்க படையணியின் தளபதி பிரிகேடியர் தம்மிக்க திஸாநாயக்க, சிங்க படையணியின் பிரதி நிலைய கட்டளை தளபதி கேணல் துலித் பெரேரா, இலங்கை சிங்க படையணியின் சேவா வனிதா பிரிவின் செயலாளர் திருமதி ரோகினி திஸாநாயக்க, திரு. திமுத் கருனாரத்ன அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 3 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபில்யு.ஏ.எம் ரன்திலக நன்கொடையினை ஒருங்கமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு சிங்க படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களும் கலந்து கொண்டார். Sportswear Design | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE