09th August 2020 12:48:26 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் பூநகரியில் அமைந்துள்ள 66 ஆவது படைப் பிரிவு மற்றும் அதற்கு கீழுள்ள பிரிகேட்களுக்கு தனது உத்தியோக பூர்வ விஜயத்தை 7ம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.
கிளிநொச்சி தளபதியின் படைப்பிரிவு தலைமையகத்திற்கான வருகையின் போது 66 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த கொடித்துவக்கு அவர்களினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் நுழை வாயிலில் மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி 66 ஆவது படைப்பிரிவு படையினருடன் குழு படம் எடுத்துக் கொண்டார். பின்னர், 66 ஆவது படைப்பிரிவு தளபதியினால் நிர்வாகம், வழங்கல், நடவடிக்கை , வகிப்பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக சுருக்கமாக விளக்கப்பட்டது.
அடுத்ததாக, அவர் 661,661 மற்றும் 663 ஆவது பிரிகேட் தலைமையங்களையும் பார்வையிட்டார். இதன்போது பிரிகேட் தளபதிகள் மற்றும் பட்டாலியன் கட்டளை அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக விளகமளித்தனர்.
அத்துடன் படையினருக்கு உரையாற்றிய தளபதி அவர்கள் கடமைகள் , சேவை அர்ப்பணிப்பு தொழில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி என்பவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இந்த விஜயத்தின் ஞாபகார்த்தமாக தளபதி அவர்கள் முகாம் வளாகங்களில் மரக்கன்றுகளை நாட்டியதோடு அதிதிகள் புத்தகத்திலும் பதிவிட்டார். Buy Sneakers | Men’s shoes