09th August 2020 12:50:21 Hours
அம்பாறையில் உள்ள 24 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 7 ஆவது படைப் தளபதியாக இலங்கை பீரங்கி படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் அவர்கள் தனது கடமையை சனிக்கிழமை 7 ஆம் திகதி பொறுப் பேற்றுக்கொண்டார்.
24 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் அவர்களுக்கு நுழைவாயிலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் 3 ஆவது விஜயபாகு (தொண்) காலாட் படையணியின் படையினரால் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் புதிய படைத் தளபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆவனத்தில் கையொப்பமிட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார். இந் நிகழ்வில் 241 மற்றும் 242 பிரிகேட்களின் தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மற்றும் பட்டாலியன் கட்டளை அதிகாரிகள் கலந்துகொண்டனர். Running sports | Nike Air Max 270