06th August 2020 20:14:08 Hours
பம்பைமடு,பெரியக்காடு,பூகொடை, கள வைத்தியசாலை மற்றும்பிற மருத்துவ நிலையங்கள் ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களை நிர்வகித்து வரும் பிரிகேட் படைத் தளபதிகளுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க கடந்த 06 ஆம் திகதி வியாழக்கிழமை 1000 பிரத்தியேக சுகாதார பாதுகாப்பு சீருடைகள் மற்றும் 1000 முக கவசங்களை வழங்கி வைத்தார்.
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைபடுத்தல் மையங்களின் சேவைகளைப் பாராட்டி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் தொற்று நோய் பரவலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பிரத்தியேக சுகாதார பாதுகாப்பு சீருடைகள் மற்றும் 1000 முக கவசங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களிடமிருந்து 562 மற்றும் 563 படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் போகொட பட்டாலியன் பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுநர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலை மையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் பிரிகேடியர் ஜகத் நிஷாந்தஅவர்களும் பங்கு பற்றினர். Best jordan Sneakers | adidas Yeezy Boost 350