Header

Sri Lanka Army

Defender of the Nation

12th August 2020 12:59:38 Hours

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் பதவி பிரமாணம் செய்யும் நிகழ்வானது ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் தலைமையில் இன்று 12 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிகு கண்டி தலதா மாளிகையின் 'மகுல் மடுவ' வில் மகா தேரர்களின் மத ஆசீர்வாத அனுஷ்டானங்களுக்கு பின்னர் இடம்பெற்றது.

மேற் குறிப்பிடபட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அவர்களின் நியமனக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டனர். இந் நிகழ்வில் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலாளர், பிரதமரின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், அரச அதிகாரிகள், விசேட விருந்தினார்கள் , பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி மற்றும் விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், அழைக்கப்பட்டவர்களின் துணைவியர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

பதவி பிரமாணத்தின் பின் பின்னர் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் புதிய நியமனங்கள் பெற்றவர்கள் ஸ்ரீ தலதா மாளிகையில் மத வழிப்பாடுகளில் ஈடுப்பட்டனர். Best Nike Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp