10th August 2020 13:50:02 Hours
யாழ் காங்கேசன்துறை பிரதேசத்தின் வறுமைக் குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டு திட்டங்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லினக்க நிலையத்தில் மாணவர் பதிவு 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி பாடநெறிகள், கணிதம், அழகியல், யோகா மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடநெறிகளுக்காக மாணவர்கள் பதிவு செய்துக் கொள்ளப்பட்டனர். பாடநெறிகளை விது அறக்கட்டளை’ மற்றும் தெல்லிப்பலை பிரதேச செயலகம் என்பவற்றின் ஒருங்கிணைப்பில் பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களினால் மேற்கொள்ளப்பட்டவுள்ளன.
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் இந்த நிலையமானது அப்பகுதியின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் அழகியல் திறன்களை மேம்படுத்துவதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, தெல்லிப்பலை பிரதேச செயலாளர், 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, உயர் அதிகாரிகள், படையினர்கள் , பிரதேசவாசிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். Running sports | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD