Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2020 13:53:02 Hours

5 ஆவது இலங்கை சமிஞ்சை படையணியின் மறைந்த போர் வீரரின் வீடு புனரமைப்பு

5 ஆவது இலங்கை சமிஞ்சை படையணியில் மறைந்த போர் வீரரான லான்ஸ் கோப்ரல் ஈ.ஆர்.பி.கே எதிரிமன்ன அவர்களுக்கு நினைவஞ்சலி மற்றும் நன்றி செலுத்தும் நிமித்தம் 5 ஆவது இலங்கை சமிஞ்சை படையணியினரால் கேகாலையில் அமைந்துள்ள அவரின் வீடு முழுமையாக புனர்நிர்மானம் செய்து அவரின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த படை வீரர் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி விசுவமடுவில் பயங்கரவாதிகளின் தாக்குதலின் போது உயிரை தியாகம் செய்தார். புனர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு 5 ஆவது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி.எம்.ஐ.எஸ். பண்டார வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இந்த திட்டமானது இலங்கை சமிஞ்சை படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இலங்கை சமிஞ்சை படையணியின் நிதி மற்றும் பிற உதவிகளுடன் 5 ஆவது இலங்கை சமிஞ்சை படையணியின் படையினரின் அர்ப்பணிப்புடன் 12 நாட்களுக்குள் புனரமைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் , பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்துக்கொண்டனர். Running sneakers | Air Jordan Release Dates 2020