Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2020 23:20:02 Hours

53 ஆவது படைப் பிரிவின் ஆண்டு நிறைவு விழா

தம்புள்ள திஹாம்பதனையில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களது ஏற்பாட்டில் பல்வேறுபட்ட சமய மற்றும் சமூக நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் முதல் அங்கமாக தம்புள்ளையில் அமைந்துள்ள ஶ்ரீ ஜினரத்ன பிக்கு அப்பியாச பயிற்சி மையத்திலுள்ள தேரர்களுக்கு அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் தம்புள்ள சிறுவர் மத்திய நிலையத்திலுள்ள சிறார்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் 53 ஆவது படைத் தளபதி, 533 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் நிஷாந்த ஜயசுந்தர அவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் 53 ஆவது படைப் பிரிவின் நிதியுதவியுடன் இந்த சிறுவர் விடுதிக்கு சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் குளியலறைகள் மீள் நிர்மானிக்கப்பட்டு உதவிகளை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர்.

இதற்கிடையில், இந்த நிறைவு விழாவிற்கு இணையாக, 53 ஆவது படைப் பிரிவின் 533 ஆவது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் 10 ஆம் திகதி திங்கட்கிழமை தம்புல்ல வைத்தியசாலையில் இரத்த தான வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன் இராணுவத்தினரால் இரத்த தானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களுக்கு பதிலாக 533 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த ஜயசுந்தர அவர்கள் பங்கேற்றுக் கொண்டார். latest Nike Sneakers | UK Trainer News & Releases