Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2020 13:16:25 Hours

மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய புதிய தொண்டர் படைத் தளபதியாக பதவியேற்பு

இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் 43 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் இம் மாதம் (10) ஆம் திகதி கொஸ்கம சீதாவக பகுதியில் அமைந்துள்ள தொண்டர் படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொண்டர் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை நுழைவாயிலில் வைத்து இத்தலைமையகத்தின் மூத்த அதிகாரியான பிரிகேடியர் கித்சிறி லியனகே அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் புதிய தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

அதன் பின்பு புதிய படைத் தளபதி அவர்கள் பணிமனை தலைமை அலுவலகத்திற்கு வருகையை மேற்கொள்ளும் போது தொண்டர் படைத் தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கெலும் நுகேகொட அவர்கள் வரவேற்றார்.

பின்னர் புதிய படைத் தளபதி அவர்கள் அவரது பணிமனைக்கு சென்று சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்பு தளபதி அவர்கள் தலைமையகத்திலுள்ள படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். இதன் போது இராணுவ தளபதி அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கு ஏற்ப இராணுவத்தில் கௌரவத்துடன் பணியாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு தளபதி அவர்கள் சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்காக நினைவஞ்சலியை செலுத்தினார்.

மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக பதவி வகித்து தற்போது தொண்டர் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Air Max 270