10th August 2020 14:00:36 Hours
நுவரெலிய மவுசாகலை மோகினி அல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதிகளில் கற்பாறைகள், மண் மேடுகள் காணப்பட்டு போக்குவரத்துகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 11, 112 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரது பங்களிப்புடன் இம் மாதம் (9) ஆம் திகதி காலை 10.45 மணிக்கு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் கே. என் குணவர்தன அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வீதிகளில் இருந்து கற்பாறைகள் மற்றும் மண்மேடுகள் முழுமையாக அகற்றப்பட்டு வீதிகளை சுத்தப்படுத்தி போக்கு வரத்து வசதிகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டன.
மேலும் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த பணிகளை முழுமையாக்கி வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸாருக்கு இராணுவத்தினரால் தகவல்கள் வழங்கி வைக்கப்பட்டன. jordan release date | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret