Header

Sri Lanka Army

Defender of the Nation

07th August 2020 17:00:29 Hours

இராணுவத்தினரால் ஆலங்குளம் பகுதியில் புகையிரத நகர்விற்கு ஒத்துழைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 56, 561 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 16 ஆவது சிங்கப் படையணியினரால் ஆலன்குளம் புகையிரத பாதையில் இம் மாதம் (9) ஆம் திகதி காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த கடுகதி புகையிரதத்தில் விபத்துக்கு உள்ளாகி பலியாகி இறந்த யானையின் பாகங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த புகையிரத பாதையில் யானை புகையிரதத்துடன் மோதுன்டு விபத்துக்கு உள்ளாகியமையால் 400 மீற்றர் தூரம் புகையிரத பாதையில் சென்று புகையிரத சில்லுக்குள் இறந்த யானையின் தசைகள் சிக்குண்டு புகையிரதம் தடம்புரண்டு போக்குவரத்துகள் ஸ்தம்பிதம் அடைந்தது.

பின்னர் 16 ஆவது இலங்கை சிங்கப் படையணியினரால் இந்த யானையின் பாகங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த முயற்சிக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்கள் , வனவிலங்கு, திணைக்களம், புகையிரத திணைக்கள ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பை வழங்கி வைத்தனர்.

அன்றைய தினம் மதியம் 1.10 மணியளவில் இந்த அகற்றும் பணிகள் முழுமையாக்கப்பட்டு யானையின் உடல் பாகங்கள் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டன.

இந்த பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 561 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. Running sport media | 『アディダス』に分類された記事一覧