Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2020 12:50:09 Hours

தெல்லிப்பலையில் நோயாளர்களுக்காக படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

யாழ் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பகத்தினரின் வேண்டுகோளுக்கமைய யாழ் படையினரால் யாழ் தெலிப்பலை புற்று நோய் வைத்திய சாலைக்கு,மாதாந்தம் சிகிச்சை, கதிர்வீச்சு நடைமுறைகள் மற்றும் சிகிச்சை தேவைக்கான பரிசோதனைக்கு வரும்நோயாளர்களின் நலன் கருதிபுதிய தங்குமிட கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டன.

படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடம் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களால்புதிய கட்டிடத்தின் நினைவு பலகை மற்றும் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு 51 ஆவது மற்றும் 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள்,சிரேஷ்ட அதிகாரிகள்,யாழ் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பகத்தின் அதிகாரிகள்,தெலிப்பலை புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் படையினர் உட்படபலர் கலந்து கொண்டனர். Nike Sneakers Store | Sneakers