Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2020 12:51:12 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்கள் முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கும் அதன் கீழ் இயங்கும் படையணிகளுக்கும் இம் மாதம் (8) ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை அந்த தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி அவர்கள் வரவேற்று பின்னர் தளபதி அவர்களுக்கு இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் கிளிநொச்சி படைத் தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் முன்னரங்க தலைமையகத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாக அம்சங்கள் தொடர்பான விளக்கங்களை விளக்கமளித்தார். பின்னர் தலைமையக அங்கத்தவர்களுடன் குழுப்புகைப்படத்தில் தளபதி அவர்கள் இணைந்து கொண்டார்.

பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் 5 ஆவது இராணுவ பொலிஸ் படையணி, 7 ஆவது இராணுவ சேவைப் படையணி, 11 ஆவது பொறியியல் சேவைப் படையணி, 6 ஆவது போர் கருவி படையணி, 7 ஆவது மின்சார் பொறிமுறை இயந்திர படையணிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு தலைமையக வளாகங்களில் மரநடுகைகளையும் மேற்கொண்டார். பின்பு பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். . short url link | Nike