Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2020 21:59:43 Hours

3ஆவது சமிஞ்சை படையணியினால் அவிசாவலையிலுள்ள மறைந்த போர் வீரரின் வீடு புனரமைப்பு

3 ஆவது இலங்கை சமிஞ்சை படை தங்களது நன்றியின் வெளிப்பாடாகவும் நினைவு அஞ்சலியாகவும் 2006 ஜுன் மாதம் 01 ம் திகதி வவுனியாவில் கள நடவடிக்கையில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி கொண்டிருக்கையில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி மறைந்த அவர்களின் போர் வீரர்களில் ஒருவரான பதவிநிலை சார்ஜென்ட ஜே கே பெரேராவின் வீட்டை ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக புனரமைத்து சமீபத்தில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கையளித்தனர்.

3 ஆவது இலங்கை சமிஞ்சை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் அனுராத மெண்டிஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

3 வீரரின் உன்னத தியாகத்தின் பின் அவரது மனைவி உறுதியுடன் நின்று மகளையும் மகனையும் வளர்கின்றார். அவர்கள் தற்போது க.பொ.த. உயர்தரம் படிக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டை புனரமைப்பதற்கு தனது கணவரின் 3 வது இலங்கை சமிஞ்சை படையின் உதவியை நாடினார்.

3 அவர்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாகும் வகையில் 3 வது இலங்கை சமிஞ்சை படை இதனை தங்களது முதன்மைத் திட்டமாக கருதி இலங்கை சமிஞ்சை படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டியாவின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களுடன் முன்னெடுத்தனர்.

3 இலங்கை சமிஞ்சை படைத் தலைமையகம் மற்றும் 11 வது இலங்கை சமிஞ்சை படை ஆகியவற்றின் நிதி மற்றும் பிற உதவிகளுடன் 3 வது இலங்கை சமிஞ்சை படை இத் திட்டத்தை 9 நாட்களுக்குள் முடித்து அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அதிகாரிகள், படையினர் மற்றும் உறவினர்கள் பங்குபற்றினர். Running sneakers | Nike