Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2020 17:54:03 Hours

நாடு திரும்பவுள்ள இலங்கையர்கள் –நொப்கோ தெரிவிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் -19 நோய் தொற்று நோய்க்கு உள்ளாகிய நோயாளி ஒருவர் கூட பதிவாகவில்லை, மேலும் காண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக உள்ளது. இன்று (8) ஆம் திகதி 6.00 மணி அறிக்கையின் படி, இவர்களில் 483 நபர்கள் புனர்வாழ்வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் , 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட 01 நபரும் உள்ளடங்குவர் என்று கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியவிலிருந்து யூஎல் – 1160 விமானம் மூலம் 164 பேர், தோகாவில் இருந்து கியூஆர் 668 விமானம் மூலம் 17பேர், சென்னையில் இருந்து 6இ 9035 விமான மூலம் 19 பேர், மற்றும் மும்பையில் இருந்து யூஎல் – 1042 விமான மூலம் 2 பேரும் கொழும்பு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு (08) ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாலைத்தீவில் இருந்து யுஎல் 1102 விமானம் மூலம் 187 பேர் இன்று (8) பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இன்று (08) ஆம் திகதி நீபுன பூசா (8) மிகிந்தலை (1), புனானி (10), ராஜகிரிய (6), ஹோட்டல் டொல்பின் (4) மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி 39 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் 68 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது தங்கள் வீடுகளுக்கு புறப்பட உள்ளனர்.

இன்றைய 08 ஆம் திகதி அறிக்கையின் படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனமைப்படுத்தப்பட்ட 29,621 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளவியரீதியில் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 33 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 1856 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (7) க்குள், 910 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதுவரைக்கும் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 167,672 ஆகும். அத்துடன், முழுமையாக குணமடைந்த 23 நோயாளிகள் இன்று காலையில் மருத்துவமனைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில், தனிமைப்படுத்தப்படுத்தல் மையங்களில் இருக்கும்போது நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் 05 பேர் வெளிநாட்டு வதிவிட இலங்கையர்கள், மீதமுள்ள 18 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்றுவரை (8), கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து 409 கொவிட்-19 நோய்தெற்றாளர்கள் முழுமையக குணமடைந்துள்ளதுடன் 195 நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். jordan release date | Trending