Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2020 22:24:08 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கல்

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொணிப் பொருளின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் 59, 68 மற்றும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய விதை நடுகை மற்றும் நகர்புற காடுகள், வேளாண்மை வனவியல் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் இராணுவத்தினர் இதுவரை அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பயிற்றுநர்களின் தலைமையில் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நவீன விவசாய நுட்பங்கள் மற்றும் நடைமுறை அணுகுமுறைகள் தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், பல சந்தர்ப்பங்களில் இராணுவத்தினர் விவசாயிகளுக்கு பருவகால பயிர்களை பயிரிடுவதற்கான விதைகளை அரசாங்க கட்டணத்தில் பெற உதவிகளை வழங்கியும் அத்துடன் ஒரு சிறப்பு பொறிமுறையின் மூலம், அவர்கள் தங்கள் விளைபொருட்களை நியாயமான விலையில் விற்கவும் பொருத்தமான சந்தைகளைக் கண்டறியவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். latest Running | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret