Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2020 21:54:50 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் விஜயத்தின் போது மரநடுகைள் மேற்கொள்ளல்

புதிய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்கள் தனது பதவியேற்பின் பின்பு 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை கடந்த ஜூலை மாதம் (29) ஆம் திகதி மேற்கொண்டார். இச்சந்தர்ப்பத்தின் போது தலைமையக வளாகத்தினுள் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை மரநடுகை திட்டத்தின் கீழ் 300 தென்னங்கன்றுகள் நடும் பணிகள் படைத் தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

652 ஆவது படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் வருகை தந்து தென்னை மரநடுகை திட்டத்தின் கீழ் முதலாவது தென்னை மரநடுகையை கடந்த ஜூலை மாதம் (29) ஆம் திகதி மேற்கொண்டு இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த மரநடுகை திட்டமானது 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் 652 ஆவது படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா அவர்களும் இணைந்திருந்தார். latest Running Sneakers | nike air force 1 shadow , eBay