Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2020 09:22:19 Hours

55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு புதிய பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை பொறுப்பேற்கும் நிகழ்வானது யாழ் கட்டைகாடு பிரதேசத்தில் அமைந்துள்ள 55 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.

இப் படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் நுலைவாயிற் மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் பிலபிட்டிய அவர்கள் மரணித்த போர் வீரர்கள் நினைவு தூபிக்கு மரியாதை செலுத்தியதுடன் படைத் தலைமையக வளாகத்தில் சந்தன மரக் கன்றும் நட்டுவைத்தார்.

பின்னர்’ மத அனுஷ்டான ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் ஆசிர்வாதம் மற்றும் வாழ்துகளையும் பெற்றுக்கெண்டார்.

அதனைத் தொடர்ந்து 55 ஆவது படைப் பிரிவின் வளர்ச்சி தொடர்பாக பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்கள் அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றியதுடன், நாட்டில் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தங்கள் கடமைகளை தங்கள் திறனுக்கு ஏற்றவாறு நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். வெளியில் உள்ள சிவில் சமூக உறுப்பினர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் தொடர்ச்சியான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அனைத்து தரப்பினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அவர் அவர்களின் நல்வாழ்வு மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியாகவும் இராணுவ தலைமையகத்தில் ஆளனி நிர்வாகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். அத்துடன் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவகொட அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் கட்டளை பிரிவுகளின் தளபதிகள் , கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவு தலைமையகத்தில் உள்ள பிற அணிகளின் படையினர் பலரும் கலந்து கொண்டனர். Sneakers Store | Nike Air Max 270