Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2020 10:19:37 Hours

கொரோனா தொற்று நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டவில்லை கோவிட் மையம் தெரிவிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 நோய் தொற்று நோய்க்கு உள்ளாகிய நோயாளி ஒருவர் கூட பதிவாகவில்லை, மேலும் காண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகிசிகிச்சை பெற்று வரும் கைதிகளின்மொத்த எண்ணிக்கை 600 ஆக உள்ளது. இன்று (2) ஆம் திகதி 6.00 மணி அறிக்கையின் படி, இவர்களில் 482 நபர்கள் புனர்வாழ்வின் கீழ் உள்ள கைதிகள், 66 பேர்கள்ஊழியர்கள், 5 பேர்கள் விருந்தினர் ஊழியர்கள், 46 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வெலிகடா சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட 01 நபரும் உள்ளடங்குவார்கள்.

மேலும் இன்று (2) ஆம் திகதி நீபுன பூசா தனமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 5 பேரும், டொல்பின் ஹோட்டலிலிருந்து 4 பேரும் தனமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய 2 ஆம் திகதி அறிக்கையின் படி தனிமைப்படுத்தப்பட்டமையங்களில் தனமைப்படுத்தப்பட்ட 28,986 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2047 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முதலாம் திகதி 1280 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரைக்கும் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 160,226 ஆகும். அத்துடன் கொரோ தொற்று நோய்க்குள்ளாகி வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வரும் 48 நோயாளிகள் பூரன குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.இவர்களில், 15 பேர் இலங்கை வெளிநாட்டவர்கள், தனமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்கும்போது நேர்மறையானவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், எஞ்சியவர்கள், பாதிக்கப்பட்ட 33 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Sneakers