Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2020 11:19:57 Hours

இலங்கையின் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு

இலங்கையின் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சம்பிரதாய ஸ்தாபிப்பு நிகழ்வானது இம் மாதம் (30) ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள சங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும், அதிதிகளாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் பதில் தூதுவர் திரு கூ வை அவர்களும், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி மற்றும் என்டியூ பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் சீன என்.டி.யு முன்னாள் மாணவர் சங்கம் நிறுவப்பட்டதன் நோக்கம் என்னவென்றால் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளிடையே பரஸ்பர நன்மை மற்றும் உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. இவர்களில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் உள்ளடக்கப்படுவார்கள். இதன் மூலம் தொடர்புகளின் வலையமைப்பையும் தேசிய மற்றும் சர்வதேச இணைப்பிற்கான வளங்களின் தொகுப்பையும் ஊக்குவிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதிகளை வரவேற்று இந்த நிகழ்வில் இந்த முன்னாள் மாணவ சங்கத்தின் விளக்கங்களை பற்றி உறையாற்றினார்.

பின்பு இந்த நிகழ்வின் முதல் அங்கமாக இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களினால் இலங்கையிலுள்ள என்டியூ முன்னாள் மாணவர் சின்னமானது வெளியிடப்பட்டன.

கொழும்பில் உள்ள பி.ஆர்.சி தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான சிரேஷ்ட கேர்ணல் செங் டொங் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்கும் முன்னாள் என்டியூ மாணவர் சங்கத்தை நிறுவியதற்கும் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் முப்படையைச் சேர்ந்த என்டியூ பட்டதாரி அதிகாரிகள், சீன தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் என்டியூ முன்னாள் மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இன்றைய அறிக்கையின் படி இராணுவத்திலுள்ள 75 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் 2001 ஆம் ஆண்டு முதல் என்டியூ பட்டங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | Sneakers